ஸ்வரச்சக்ரா தமிழ்



"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" இதை உங்களது மொபைலில் பார்க்க முடிந்தால் உங்களது மொபைலில் ஸ்வரச்சக்ரா மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு வேலை செய்கிறது என்று பொருள். நீங்கள் எந்த சொற்களையும் பார்க்க முடியவில்லை அல்லது வார்த்தைகள் சில தவறாக இருந்தால், ஸ்வரச்சக்ரா முறையாக வேலை செய்யவில்லை என்று பொருள். (If your device can display this sentence in Tamil perfectly, then your device supports Tamil and Swarachakra should also work well. If you do not see any text, or if some of the words are incorrect, Swarachakra may not work well.)

ஸ்வரச்சக்ரா-தமிழ் தமிழில் எழுதுவதற்கான ஒரு தொடு-திரை கீபோர்ட் (சுவாரசாக்கிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி, குஜராத்தி, ஒரியா, பஞ்சாபி, பெங்காலி மற்றும் கொங்கனியில் கிடைக்கிறது)


ஸ்வரச்சக்ரா தட்டச்சு

தமிழில் நாம் உயிர்மெய் எழுதுவதற்கு மெய்யும் உயிரும் சேர்த்து தட்டச்சு செய்ய வேண்டும் (எ.கா. க + ி = கி). ஒரு மெய் எழுத்தைத் தொட்டால் அதனோடு அடிக்கடி பயன்படும் 10 மெய் எழுத்துகள் இணைந்து அதற்கேற்ற உயிர்மெய் எழுத்துகள் (கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை...) ஒரு வட்டத்தில் தோன்றும். உங்களுக்கு வேண்டிய உயிர்மெய்யை தேர்வு செய்ய உங்கள் விரலை அதன் மீது ஸ்லைட் செய்யவும்.உயிர் எழுத்துக்கள் கீழே வலப்புறத்தில் தனியாக ஒரு வட்டத்தில் தோன்றும். எண்கள், குறியீடுகள் அரிய எழுத்துகளும் “SHIFT” அழுத்தினால் தோன்றும். ஆங்கிலத்தில் எழுத “QWERTY” எழுத்துகளுக்கு மாற வேண்டும்.


ஸ்வரச்சக்ரா நிறுவ

  1. முதலில் “Install” பட்டனை அழுத்தி ஸ்வரசக்ரவை இந்‌ஸ்டால் செய்ய வேண்டும். அடுத்து கீபோர்ட்டை “Enable” செய்ய வேண்டும்.
  2. “Settings” யை திறந்து "Language and input” பகுதியில் உள்ள தமிழை அழுத்தவும்.
  3. இறுதியில் “Keyboard and Input methods” யில் உள்ள "Default" பட்டனை அழுத்தி யைஸ்வரச்சக்ரா தமிழை தேர்வு செய்ய வேண்டும்.



Contact Us

For any queries and suggestions, contact us.